ராமநாதபுரம், செப்.17-
ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார். ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை கிராமத்தை சேர்ந்தவர் குப்பமுத்து விவசாயி. இவரது மகள் லட்சுமி என்ற லாவண்யா (வயது 17) இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் 25-ந்தேதி பள்ளிக்கு சென்ற லட்சுமி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் கவலை அடைந்து பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.