WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS....Flash News......பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo<><>ஜும்ஆ பயான் - இஸ்லாமிய அறிவு புரட்சி<><>ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்<><>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்<><>பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


இனிய இல்லம் ஸ்பெஷல்


கேரளா நண்டு குழம்பு


நண்டுகளை பற்றிய சில செய்திகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நண்டு உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினமாகும். நன்னீர் நிலைகளிலும் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு. சில மில்லிமீற்றர் (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு மீற்றர் (m) வரை வளரும் யப்பானியச் (Japanese) சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. நண்டுகள் பொதுவாக தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.

நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக் கொருமுறை மேலோடுகள் களன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை.

பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.


தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி- 100
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பச்ச மிளகாய் - 2
மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - 3ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் -1/2ஸ்பூன்
பட்டை -1
கிராம்பு -1
ஏலக்காய் - 1
தயிர் - 1/2கப்
கறிவேப்பிலை
அரைத்த தேங்காய் விழுது - 3ஸ்பூன் அல்லது தேங்காய் பால் -1/2 கப்
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு


முதலில் நண்டை சுத்தமாக அலசி வைக்கவும். அதில் மிளாய்த்தூள்,மஞ்சள்த்தூள்,தனியாத்தூள், சீரகத்தூள்,பெருஞ்சிரகத்தூள், சிறிது தயிர், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு போட்டு விரவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
காடாயில் நன்றாக எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கிராம்பு,பட்டை,ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட், பச்சமிளகாய், கறிவேப்பிலை, தக்களி சேர்த்து நன்றாக வதக்கவும்

பிறகு விரவி வைத்த நண்டு கலவையினை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த தேங்காய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். விருப்பபட்டால் மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இந்தியன் ஸ்பைசி நண்டு கிரேவி


கடல் நண்டுக்கு ஈடான சுவை வேறு எதிலும் இல்லை. நண்டு உடலுக்கு சூடு என்பதால் கர்பிணி பெண்கள் ஆரம்ப காலத்தில் சாப்பிடுவது கிடையாது. நண்டின் ஓட்டில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கு. இதன் சதை பகுதியில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி- 100
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பச்ச மிளகாய் - 2
மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - 3ஸ்பூன்
கறிவேப்பிலை
அரைத்த தேங்காய் விழுது - 3ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - தேவைக்கு

முதலில் நண்டை சுத்தமாக அலசி வைக்கவும். அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு போட்டு விரவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

கடாயில் நன்றாக எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் சிறிது வெந்தயம் போட்டு வதக்கவும். வதங்கிய பின்பு வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதில் மீதி இஞ்சிபூண்டு பேஸ்ட், பச்சமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக கனிய வைக்கவும்.

பிறகு விரவி வைத்த நண்டு கலவையினை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த தேங்காய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக திக் கிரேவி ஆகும் வரை அடுப்பிலை சிம்மில் மூடி போட்டு வேக விடவும்.

நண்டுகளை தட்டில் வைத்து அதன் மேல் கிரேவியினை வைத்து பரிமாறம். சுவையான இந்தியன் ஸ்பைசி நண்டு கிரேவி ரெடி.. சுவைத்து பார்த்து கருத்தினை சொல்லுங்கள்...

கேரளா இறால் ஃப்ரை



தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 1
பச்சமிளகாய் - 2
கருவேப்பிலை
மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
தேங்காய் பவுடர் - 2 ஸ்பூன்
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு



மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் (எண்ணெய் தவிர)அனைத்தையும் விரவி 20 நிமிடம் ஊறவைக்கவும்

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி இறாலை வதக்கவும் மேலே தேங்காய் பவுடர் சேர்த்து தேவைக்கு  சிறிது தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். உப்பு தூள் தூவி இறக்கவும். 


சுவையான கேரளா இறால் ஃப்ரை ரெடி. ரசம் சாதம், பருப்பு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஃப்ரான் நூடுல்ஸ்:



செய்ய தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 200 கிராம்
இறால் - 200 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2ஸ்பூன்
சில்லி சாஸ் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு'
எண்ணெய் - தேவைக்கு
கொத்தமல்லி - தேவைக்கு


செய்முறை
நூடுல்ஸ் சை தனியாக வேக வைத்து வடித்து தனியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு நீட்டமாக அரிந்த வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் வதங்கிய பிறகு இறாலை சேர்க்கவும்.
மிளகுத்தூள் தூவி வதக்கவும். இறால் சுண்டிய பிறகு வேக வைத்த நூடுல்ஸ்சை சேர்க்கவும்.
இதன் மேல் சாஸ் வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். தேவைக்கு உப்பும், கொத்த மல்லி தூவி நன்றாக கலந்து இறக்கவும்.
சுவையான ஃப்ரான் நூடுல்ஸ் ரெடி

என்றும் நட்புடன்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இறால் வறுவல்:


தேவையான பொருட்கள்:
பெரிய இறால் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2ஸ்பூன்
பச்சமிளகாய் - 1
கறிவேப்பிலை - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 100
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு



இறாலை நன்றாக சுத்தம் செய்து அதில் மஞ்சள்த்தூள் போட்டு விரவி கடாயில் எண்ணெய் விடாமல் சுண்ட வதக்கி எடுக்கவும்.



இதனுடன் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு கடாயில் தேவைக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பிரட்டி வைத்த இறாலை போட்டு சுண்ட வதக்கவும்..

இது ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
என்றும் நட்புடன் உங்கள்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இறால் கோஸ் பொறியல்




முட்டைகோஸ் - 1/4 கிலோ
இறால் - 100
சின்ன வெங்காயம் - 1/4கிலோ
கறிவேப்பிலை
மாசித்தூள் - 2ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 5ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கு

வறுத்து மிக்ஸியில் தூளாக்கவும்
சீரகம் - 1/4 ஸ்பூன்
காய்ந்த வத்தல் - 5

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு சிறிது சீரகம் போட்டு தாளிக்கவும் அதில் பொடிதாக அரிந்த வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கிய பின்பு பொடிதாக அறிந்த கோஸ் போட்டு வதக்கவும் சிறிது வதங்கிய பின்பு சுத்தம் செய்த இறாலை போடவும். உப்பு , தேங்காய்பூ, மாசித்தூள் மற்றும் தூளாக்கியா சீரக வத்தல் பொடியினை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து சிம்மிலே அடுப்பை வைத்து வேக வைக்கவும். இடையில் அப்ப அப்ப கிண்டிவிடவும்.

சுவையான இறால் கோஸ் பொறியல் ரெடி

ஃப்ரை ஃபிஷ் பிரியாணி




சுவையான பிஷ் பிரியாணி சுவைக்க வாருங்கள்



தேவையான பொருட்கள்


வஞ்சர மீன் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 3/4கிலோ
வெங்காயம் - 5
தக்காளி - 4
பச்சைமிளகாய்- 4
கொத்தமல்லி - 1கட்டு
புதினா - 1 கட்டு
இஞ்சி பூண்டு விழுது - 3ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3ஸ்பூன்
மல்லித்தூள் - 1ஸ்பூன்
கலர் பவுடர் - சிறிது
உப்பு - தேவையான அளவு


மீனில் தடவும் மசாலா :


மல்லி தூள் - 2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2ஸ்பூன்
எண்ணெய் - 3ஸ்பூன்
உப்பு - சிறிது


தாளிக்க

நெய் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 3
பிரிஜ்ஜி இலை - 1


செய்முறை:வெங்காயம் , தக்காளி, பச்சமிளகாய் நீளவாக்கில் நறுக்கவும். மீனன சுத்தம் செய்து தனியாக வைக்கவும்.



சுத்தம் செய்த மீனில் மீன் மசாலாவை தடவி 1/2 மணி நேரம் பிரிஜில் வைக்கவும்



மீனை தோசைக்கல்லில் ஃப்ரை பண்ணி எடுத்து தனியாக வைக்கவும். பொறித்த மீனின் தோலை எடுத்துவிடவும் கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு சிறுது வெங்காயத்தை ஃப்ரை பண்ணி தனியாக வைக்கவும்




ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் ப்ரிஜ்ஜி இலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். . வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கொத்தமல்லி, புதினா போட்டு கிளறி விட்டு மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சிறிது போட்டு கிளறவும்



பாஸ்மதி அரிசியினை 20 நிமிடம் ஊற வைத்து 3/4 பாகம் வேக வைத்து சாததை வடித்து தனியாக வைக்கவும் தேவைக்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இதில் கிரேவியினை போட்டு கிளறி வைக்கவும்



வேறு ஒரு அடி கணமான பாத்திரத்தில் சிறுது எண்ணெய் ஊற்றி அதன் மீது பொறித்த வெங்காயம் பாதி தூவி அதன் மேல் கிரேவி கலந்த சாதம் போடவும் .அதன் மேல் ஃப்ரை பண்ணிய மீனை வைக்கவும். அதன் மேல் சாதம் போட்டு மெல்ல அழுத்தி விடவும் மேலே பொறித்த மீதி வெங்காயம் தூவவும். எலுமிச்சை பழம் பிழிந்து விடவும். அதன் மீது சிறுது தண்ணீரில் கலந்த கலரை சுற்றி வரை ஊற்றவும் . இருக்கமான மூடி போட்டு 10 நிமிடம் ஹையிலும், 15 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்



சூடான சுவையான ஃப்ரை ஃபிஷ் பிரியாணி தயார். இந்த பிரியாணி செய்ய கொஞ்சம் வேலை அதிகமாக தான் இருக்கும் இதன் சுவையும் அதிகமாக தான் இருக்கும்


என்றும் நட்புடன் உங்கள்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


சால மீன் வறுவல்


சால மீன் - 20
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
பச்சமிளகாய் பேஸ்ட் - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொறிக்க




மீனை நன்றாக சுத்தம் செய்து மேலே சொன்ன எல்லா பொருட்களையும் மீனுடன் விரவி 1மணிநேரம் ஊற வைக்கவும்..



கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு மீன்களை பொறித்து எடுக்கவும்.. சிம்பிளான சால மீன் வறுவல் ரெடி.

பருப்பு சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

என்றும் நட்புடன் உங்கள்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


கருவாட்டு குழம்பு


தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த தொண்ட கருவாடு - 100கிராம்
சிறிய வெங்காயம் - 100கிராம்
தக்காளி - 3
பூண்டு ப‌‌ல் - 6
கத்திரிக்காய் - 1
மிளகாய்த் தூள் - 2கரண்டி
பச்சமிள்காய் - 2
புளி - சிறு உருண்டை
தேங்காய் விழுது - 3 கரண்டி
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எ‌ண்ணெ‌ய் - 4 தே‌க்கர‌ண்டி
க‌றிவே‌ப்‌பிலை - சிறுது


செ‌ய்முறை
தொண்ட கருவாடை சுத்தம் செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்.
நன்றாக அலசி தனியாக வைக்கவும்
கருவாடுடன் பாதி வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு போட்டு விரவி வைக்கவும்.

புளியை தண்ணீரில் கரை‌த்து சாறு எடு‌த்து அதில் மிளகாய்த்தூள், தேங்காய்விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கல‌ந்து வை‌க்கவு‌ம்.

பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு அதில் தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி
அதன் மேலே கருவாடு கலவையினை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின்பு தேங்காய் புளி கரைசலை ஊற்றி மீதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்..

சூடான சுவையான கருவாட்டு குழம்பு ரெடி.. இது எங்க அம்மா கைமணம்...
என்றும் நட்புடன் உங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


வஞ்சர மீன் ஃப்ரை



தேவையான பொருட்கள்
வஞ்சர மீன் துண்டுகள் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
சோளமாவு - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100கிராம்
எலுமிச்சை சாறு - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
மீனை நன்றாக சுத்தம் செய்து மேலே குறிப்பிட்ட மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பேனில் தேவைக்கு எண்ணெய் ஊற்றி மீனை பொறிக்கவும்..
இருபுறமும் திருப்பி போட்டு பொறித்து எடுக்கவும்.






பிறகு அதே எண்ணெயில் பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தை பொறித்து எடுக்கவும்.இதனை பொறித்த மீன் துண்டுகள் மீது தூவி சூடாக பரிமாறவும்.
என்றும் நட்புடன் உங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


மீன் வறுவல் குழம்பு


மீன் குழம்பும் வறுவலும் தனி தனியாக தான் நாம் சாப்பிட்டு இருக்கோம்.. ஆனால் நமது வலைப்பூவின் நண்பர் நட்புடன் ஜமால் அவர்கள் வீட்டில் இரண்டையும் ஒன்றாக செய்து சமையல் செய்வாங்களாம். அவங்க சொன்னது போலும், எனது சமையல் முறைபடியும் செய்தேன் சுவையாக வந்தது நீங்களும் செய்து பாருங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

மீன் வறுவலுக்கு:
வஞ்சர மீன் - 1/4 கிலோ
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
மிளாகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 ஸ்பூன்
தனியாத்தூள்- 1/4ஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்

இவைகளை ஒன்றாக போட்டு விரவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி பொறித்து தனியாக வைக்கவும்.

குழம்புக்கு:
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்- 1/2 ஸ்பூன்
புளி கரைசல் - 4 ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவைக்கு


கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு நீட்டமாக அரிந்த வெங்காயம் போட்டு வதக்கவும் இதனுடன் ப.மிளகாய்,மிளகாய்த்தூள்,க.பிலை இஞ்சி,பூண்டு பேஸ்ட் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு புளி கரைசல் , தேங்காய் பால் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.

இறக்கிய பின்பு வறுத்த மீன் துண்டுகளை போட்டால் சுவையான மீன் வறுவல் குழம்பு ரெடி.. குழம்பு திக்காக இருந்தால் சுவை அதிகமாக இருக்கும்.

செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதியவும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


கேரளா மீன் வறுவல்


கேரளாவில் உணவு மிகவும் ருசியாக இருக்க காரணம் அவங்க உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைப்பது தான்..அளவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் தான் ருசி. அதிகமாக சேர்த்தால் ருசி மாறிவிடும்..
தேங்காய் எண்ணெயில் பொறித்த மீன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும். செய்துபார்த்து கருத்து சொல்லுங்கள்

வஞ்சர மீன் வட்டமாக நறுக்கியது 3 துண்டுகள்
தேங்காயண்ணெய் ‍ பொறிக்க‌
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மிளாகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 4
கறுவேப்பிலை ‍ தேவைக்கு
பூண்டு -3 பல்
எழுமிச்சை சாறு ‍ சிறிது

செய்முறை

முதலில் மீனை சுத்தம் செய்துக்கொள்ளவும்.
முதலில் சின்ன வெங்காயம்,கறுவேப்பிலை ,பூண்டுஇவற்றை அம்மியில் சிறுது தட்டிக்கொள்ளவும்.

இதனுடன் மிளகுதூள், மிளாகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு எழுமிச்சை சாறு கலந்து மீனில் நன்றாக தடவி 1 மணி நேரம் ஊறவிடவும்.
பின் அடுப்பில் தோசைகல் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மீன் தூண்டுகளை போட்டு பொறித்து எடுக்கவும்.

சூடான சுவையான மீன் வறுவல் ரெடி...

ரமலான் பிரியாணி கஞ்சி

 ரமலான் சிக்கன் காய்கறி பிரியாணி கஞ்சி
தேவையான பொருட்கள்:
 போன்லெஸ் சிக்கன் -1/4கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
கேரட்- 1
கோஸ் -சிறுது
உருளைகிழங்கு - 1
தயிர் - 1/2கப்
கொத்தமல்லி - 1/2கட்டு
புதினா - 1/4கட்டு
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
பச்சமிளகாய் - 1
பட்டை,கிரம்பு, ஏலக்காய் - தலா 2
ரம்ப இலை - 1
பாஸ்மதி அரிசி - 1கப்
சிறுபருப்பு - 1/2கப்
உப்பு - தேவைக்கு
நெய் - 100கிராம்
தேங்காய் எண்ணெய் - 100கிராம், தேங்காய்,முந்திரி,கசகசா விழுது - 6ஸ்பூன்
 பாஸ்மதி அரிசி, சிறுபருப்பையும் அலசி 20 நிமிடம் ஊறவைக்கவும்
 நெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலக்காய், கிராம்பு, ரம்ப இலை போட்டு தாளிக்கவும்
 அதில் நீட்டமாக அரிந்த வெங்காய்ம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.  பச்ச வாடை போன பின்பு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும்
 நன்றாக வதங்கிய பிறகு சிக்கன் மற்ற காய்கறிகளை போடவும். தயிர் சேர்க்கவும். கொத்தமல்லி சேர்த்து 10 நிமிடம் சிம்மிலே மூடி போட்டு வேக விடவும்
 பிறகு தேவைக்கு தண்ணீர்விட்டு கொதிவரும் பொழுது அரைத்த தேங்காய் விழுதினை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்
 தண்ணீர் கொதிவந்த பின்பு ஊற வைத்த அரிசி பருப்பு கலவையினை சேர்க்கவும்.
 குக்கரை மூடி 3வீசில் வைத்து ஆப் செய்யவும். நன்றாக அரிசி குழைந்து இருக்கும். இதனை ஆறவிடவும்
 ஆறிய பிறகு மிக்ஸியில் கஞ்சி பதத்தில் அரைத்து எடுக்கவும்
 சுவையான சிக்கன் காய்கறி பிரியாணி கஞ்சி ரெடி.
காயல் ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி கஞ்சி
 போன்லெஸ் சிக்கன் -1/4கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3ஸ்பூன்
தயிர் - 1/2கப்
கொத்தமல்லி - 1/2கட்டு
புதினா - 1/4கட்டு
பச்சமிளகாய் - 15
பட்டை,கிரம்பு, ஏலக்காய் - தலா 2
ரம்ப இலை - 1
பாஸ்மதி அரிசி - 1கப்
சிறுபருப்பு - 1/2கப்
தேங்காய்,முந்திரி,கசகசா விழுது - 6ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் - 100கிராம்
தேங்காய் எண்ணெய் - 100கிராம்,
 பாஸ்மதி அரிசி, சிறுபருப்பையும் அலசி 20 நிமிடம் ஊறவைக்கவும்
நெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலக்காய், கிராம்பு, ரம்ப இலை போட்டு தாளிக்கவும்
அதில் நீட்டமாக அரிந்த வெங்காய்ம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.  பச்ச வாடை போன பின்பு சிக்கன்,தக்காளி,பச்சமிளகாய், தயிர் ஊற்றி வதக்கவும். கொத்தமல்லி சேர்த்து 10 நிமிடம் சிம்மிலே மூடி போட்டு வேக விடவும்
பிறகு தேவைக்கு தண்ணீர்விட்டு கொதிவரும் பொழுது அரைத்த தேங்காய் விழுதினை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்
தண்ணீர் கொதிவந்த பின்பு ஊற வைத்த அரிசி பருப்பு கலவையினை சேர்க்கவும்.
குக்கரை மூடி 3வீசில் வைத்து ஆப் செய்யவும். நன்றாக அரிசி குழைந்து இருக்கும். இதனை ஆறவிடவும்
ஆறிய பிறகு மிக்ஸியில் கஞ்சி பதத்தில் அரைத்து எடுக்கவும்

சுவையான  காயல் ஸ்பெஷல் வெள்ளை  பிரியாணி கஞ்சி ரெடி.. 











ஹைதராபாத் சிக்கன் ஹலீம்

 நோம்பு நேரத்தில் ஹைதராபாத்தில் மிகவும் பிரபலமான உணவு வகையில் இதுவும் ஒன்று..  தமிழ்நாட்டில் நோன்பு திறக்க கஞ்சி குடிப்பது போல் ஹைதராபாத்தில் ஹலீம் சாப்பிடுவாங்க.. இது செய்வது கஷ்டம் என்பதால் இதனை செய்யாமலே ஹைதராபாத்தில் இருக்கும் பொழுது கடைகளில் வாங்கி சாப்பிட்டு வந்தோம்.  சென்னை வந்த பின்பு இதன் சுவையினை மறக்க முடியவில்லை,  ஹைதராபத்தில் இருந்து "பிஸ்தா ஹவுஸ்"சில் ஆர்டர் பண்ணி கூரியரில் ஹலீம் வந்து சாப்பிட்டோம். அவ்வளவு ருசி இந்த ஹலீமில் இருக்கிறது. இங்கு வந்த பின்பு கூட நோன்பில் ஹலீம் சாப்பிடும் ஆசை வந்தது..இங்கு எங்கே போவது, வீட்டில் தான் செய்யனும், வேல்டு வெய்டில் ஹலீம் மிக்ஸ் கிடைத்தது வாங்கி வந்து செய்தேன்.. ஹைதராபாத்தில் சாப்பிட்ட ருசி கிடைத்தது.
 ரெடி மிக்ஸ் ஹலீம் செய்வது ஈசியாக இருப்பதால் அடிக்கடி செய்யும் ஆசை வந்துவிட்டது. இந்த மிக்ஸ் உங்களுக்கும் கிடைத்தால் நீங்களும் செய்துபாருங்கள். தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2கிலோ
shan haleem mix - 1பேக்,
நெய் - 11/2கப்
பல்லாரி வெங்காயம் - 2
கொத்தமல்லி - 1/2கட்டு
தாளிக்க:
பட்டை-1
கிராம்பு -1
ஏலக்காய் -2
பிரிஜி இலை -1
ஷா சீரா - 1ஸ்பூன்
குக்கரில் 1/2கப் நெய் ஊற்றி காய்ந்த பின்பு பேன்லெஸ் சிக்கன் போட்டு நன்றாக 10 நிமிடம் வேகவிடவும்

10நிமிடம் கழித்து ஹலீம் ஸ்பைசி மிக்ஸ் கலந்து 2 ,3வீசில் வைத்து வேக வைக்கவும்

வேறு பாத்திரத்தில் சிக்கன் கலவையினை போட்டு 15கப் தண்ணீர் ஊற்றி  கொதிக்க வைக்கவும்

கொதி வந்த பின்பு ஹலீம் தால் மிக்ஸ் பேக்கினை போட்டு கலந்து வேகவிடவும்.

சிம்மிலே 2 மணி நேரம் வேக விடவும், 10 நிமிடங்களுக்கு ஒரு முறை கிண்டி விடவும்.  நல்ல பேஸ்ட் பதம் வந்த பின்பு அடுப்பை அனைக்கவும்.

கடாயில் 1கப் நெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிக்க வேண்டிய பொருட்களை போடவும்.

நீட்டமாக நறுக்கிய பல்லாரியினை தாளிப்பில் போட்டு வதக்கவும்.

நன்றாக பிரெவ்ன் கலர் ஆகும் வரை வதக்கவும்.

வதங்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி கிளறி விடவும்.

சுவையான ஹைதராபாத் ஹலீம் ரெடி. பரிமாறும் பொழுது நெய் கலந்த பொறித்த வெங்காயம் மற்றும் சிறு துளி எலுமிச்சை சாறு மேலே தூவி பரிமாறவும்.



சிக்கன் கோல்டு காயின்

 தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் - 15
உருளைகிழங்கு - 1/4கிலோ
சிக்கன் கீமா - 1/4கிலோ
வெங்காயம் - 100கிராம் (பொடியாக  நறுக்கவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
மிளகுத்தூள் - 2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/4ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - சிறுது
உப்பு - தேவைக்கு
ரஸ்க்குத்தூள் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு

 செய்முறை:
முதலில் உருளைகிழங்கை வேக வைத்து தோல் எடுத்து மசித்து தனியாக வைக்கவும்.
வாணலியில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் போடவும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்,  நன்றாக வதங்கிய பின்பு சிக்கன் கீமா போடவும் அதன் மேலே மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்த்தூள்,கரம்மசாலாத்தூள், போட்டு நன்றாக கிளறவும். இதனுடன் வேக வைத்து மசித்த உருளைகிழங்கை சேர்த்து வதக்கவும். சுண்ட வதக்கவும். கடைசியாக கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். (கட்லெட் செய்வது போல் கலவை ரெடியாக இருக்கட்டும்) இந்த கலவை செய்முறை அனைவருக்கும் தெரிவதால் படங்கள் எடுக்கவில்லை.

 இனி கோல்டு காயின் செய்முறை பார்ப்போம்
1. பிரெட் ஒன்றை எடுத்து அதன் மேலே சின்ன மூடி வைத்து வட்டமாக அழுத்தி சுற்றவும்.

 2. அனைத்து பிரட்டையும் இப்படி வட்டமாக கட் செய்து எடுத்து வைக்கவும்
 3. பிரெட்டின் மேல் பகுதியில் சிக்கன் கலவையினை முழுவதும் வைத்து நன்றாக அழுத்திவிடவும். எல்லா பிரெட்டிலும் இப்படி ரெடி செய்து வைக்கவும்
 4. பிரெட்டின் மேல் பகுதியினை மட்டும் ரஸ்க்தூளில் முக்கி இதனை தனியாக வைக்கவும்.
5. வாணலியில் பொறிக்கும் அளவுக்கு எண்னெய் விட்டு எண்ணெய் காய்ந்த பின்பு சிக்கன் கோல்டு காயினை பொறித்து எடுக்கவும்.
6. (பிரெட் இதுக்கு பேஸ் என்பதால் எண்ணெய் குடிக்கும் ) டிஸ்யூ பேப்பர் மேலே வைக்கவும். பரிமாறும்  பொழுது இதன் நடுவில் தக்காளி சாஸ் வைத்து அதன் மேலே சின்ன கொத்த மல்லி இலை ஒன்றை வைக்கவும். பார்க்க அழகாவும் சுவைக்க ருசியாகவும் இருக்கும் இந்த சிக்கன் கோல்டு காயின். 

 



இஃப்த்தார் பார்ட்டி மெனு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அழகான ரமலான் மாதத்தில் பல நல்ல அமல்கள் நம் மனதுக்கு பல மகிழ்ச்சியினை தருகிறது. அதில் ஒன்று தான் நோன்பு திறக்கும் நேரம். 
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)
இந்த மகிழ்ச்சியினை குடும்ப நபர்கள், மற்றும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து நோன்பு திறப்பதில் அல்லாஹ் தாலா நிறைய நன்மைகள் வைத்திருக்கிறான். 
எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி


 நமது ஊர்களில் சில இடங்களில் அவர் அவர் வசதிக்கு ஏற்ப சின்னதாகவோ, பெரிதாகவோ குடும்ப நபர்கள், மற்றும் தெருவில் வசிப்பவர்களை வீட்டில் அழைத்து நோன்பு திறக்க வைப்பார்கள். அனைவரையும் ஒன்றாய் இருந்து நோன்பு திறக்கும் அழகே தனி தான். ஆனால் இன்று ஓவ்வொரு ஊர்ராக தனி தனியாக பிரிந்துவந்துவிட்டோம்.. இங்கு இருக்கும் நண்பர்களை அழைத்து வீட்டில் நோன்பு திறக்க வைப்பதும் ஒரு வித அழகு தான்.
ஊரில் இருக்கும் பொழுது வீட்டில் பெரியவர்களின் ஆலோசனையில் இஃப்த்தார் பார்ட்டிக்கு ரெடி பண்ணுவோம். தனியாக இருக்கும் மக்களுக்கு கொஞ்சம்  ரெடி பண்ணூவதில் சிரமமம் இருக்கலாம். அதுக்கு தான் சில டிப்ஸ்.

 1.முதலில் இஃப்த்தார் எந்த வீக் என்டில் கொடுக்கிறோம் என்று முடிவு செய்துக்கொள்ளவும்.
2.வீட்டில் எத்தனை பேர் அமர இடம் இருக்கோ அந்த அளவுக்கு மட்டுமே ஆட்களை கூப்பிடவும். ( சொந்த வீடு போல் இங்கு எங்கே வீடு இருக்கு. எல்லாம் அட்ட பெட்டி அளவுக்கு தானே இருக்கு)
3.யார் யாரை அழைக்க விரும்புகிறோமோ அவர்களை அனைவரையும் ஒரு பேப்பரில் எழுதி போன் செய்து இஃப்த்தாருக்கு அழைப்பு கொடுக்கவும்.
4.பின்பு என்ன மெனு ரெடி பண்ணனும் என்று ஒரு வாரம் முன்பே ரெடி பண்ணவும்.
5.என்ன என்ன ஐட்டம் ரெடி பண்ணனும் என்று நினைத்த அனைத்து ஐட்டங்களையும் பேப்பரில் எழுதவும்.
6. அதன் அருகிலே அந்த ஐட்டங்களுக்கு என்ன என்ன பொருட்கள் தேவையினு ரப்பாக எழுதி வைக்கவும். உ.த: கட்லெட் - (கீமா,ரஸ்க்,உருளைகிழங்கு,முட்டை) அப்படினு எழுதி வைக்கவும்.
7.இதில் எந்த எந்த பொருட்கள் வீட்டில் இல்லை என்று தெரிந்துவிடும். மீதியிருக்கும் ஐட்டங்களை மட்டும் ஒரு லிஸ்ட் எடுத்து அந்த பொருட்களை மட்டும் கடையில் வாங்கி வைக்கவும். (கடைசி நேரத்தில் இந்த சாமான் இல்லை என்ற தொல்லை இருக்காது, வீண் அலைச்சல் இல்லாமல் இருக்கும்)
8. எத்தனை பேர் வராங்களோ அவங்களுக்கு தகுந்தது போல் யூஸ் அந் தோரோ தண்ணீர்கப்,தட்டு, ஸ்பூன், ஐஸ் கீரிம் கப், ஜூஸ் டம்ளர் கஞ்சி கப்பு,டிஷ்யூ பேப்பர் என்று தேவையான சாமாண்களை வாங்கிவிடவும். (இது வாங்கி வைத்துவிட்டால் பாத்திரம் கழுவும் வேலை மிச்சம்)
9.இப்ப பொருட்கள் எல்லாமே ரெடி ஆச்சு, இஃப்த்தார் பார்ட்டிக்கு ஒரு நாள் முன்னாடியே ஒரு சில ஐட்டங்கள் முன்பே செய்து வைத்துவிடவும்.
10.பாலூடா, கடல்பாசி முதல் நாளே செய்து ப்ரிஜில் வைத்துவிடலாம்
11.கட்லெட்க்கு, மற்ற ஸ்டப்பிங் ஐட்டங்களை முதல் நாளே ரெடி செய்து ஃப்ரிஜ் லாக் கவரில் போட்டு பிரிஜில் வைத்துவிடவும்.
12.அப்ப அப்ப சேரும் பாத்திரங்களை உடனே அலசி வைக்கவும்.
13.பார்ட்டிஅன்று காலையில் கஞ்சி போடவும், மற்றும் வடைக்கு, பஜ்ஜி, போண்டாக்கு ரெடி செய்யும் ஐட்டங்களை தாயர் செய்து வைக்கவும்.
14.நிறைய ஐட்டங்கள் செய்யும் பொழுதும் பலகாரங்களின் எண்ணிக்கையினை குறைத்துக்கொள்ளவும்.  15. சிறிவர்களையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளவும். குழந்தைகள் சாப்பிடுமோ இல்லையோ அவங்க தட்டிலும் எல்லா ஐட்டங்களையும் வைக்கசொல்லுவாங்க. ஆகையல் மொத்த்தாமக 15பேர்  என்றால் நீங்கள் செய்யும் பஜ்ஜி, சொஜ்ஜி ஓவ்வொன்றிலும் எண்ணிக்கை 20 ,22க்குள் இருக்கட்டும். அதிகம் செய்தால் அதிகம் மிஞ்சிவிடும். "உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்" என்பது நபிகள் நாயகம் (ஸல்) மொழிந்த ஓர் நபி மொழி
16. நோன்பு திறக்கும் 2 , 3 மணிநேரம் முன்பிலிருந்து பொறிக்கும் ஐட்டங்களை பொறித்து வைக்கவும்.
17.கடைசி நிமிடம் வரை அடுப்படியிலே இருக்க வேண்டாம். நோன்பு திறக்கும் அரை மணி நேரம் முன்பே ஓவனில் சூடு செய்துக்கொள்ளலாம்.
18. பழங்களை எல்லாம் 1 மணி நேரம் முன்பு கட் செய்து தட்டில் அழகாக வைத்து பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி வைத்துவிடவும்.
19. பொறித்த ஐட்டங்களை அப்படியே தட்டில் வைக்கமல் கண்களின் பார்வைக்கு கொஞ்சம் விருத்தளிக்கும் படி கொஞ்சம் அழகாக வைக்கவும்.
20. இஃப்த்தார் டைமுக்கு 10 நிமிடம் முன்பே சபை ரெடியாக இருந்து அனைவரும் ஒன்றாய் அமர்ந்துவிடவும்.  ''நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். புகாரி: 1957
21.நோன்பு துறப்பதை அதன் நேரத்தை கடக்க விடாமல் சரியான நேரத்தில் துறப்பவர்கள் நன்மையில் நீடிப்பார்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
22. நோன்பு நேரத்தில் நினைவுக்கூற சில துஆக்கள்
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:16.
23. இஃப்த்தார் பார்ட்டி முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாக சேர்த்து தொழுகை ஜமாத்தை தொழுதுவிடவும்.
24. மீதியிருக்கும் ஸ்நாக்ஸ் சை அவங்க விரும்பியதனை வந்தவங்களுக்கு கொடுத்துவிடவும். மற்றதை ஜிப் லாக் கவரில் போட்டு ஃப்ரிஜில் எடுத்து வைத்துவிட்டால் மறு நாள் இஃப்த்தாருக்கு வைத்துக்கொள்ளலாம்.
இஃப்த்தார் மெனு சில:
ஈத்தபழம்

வெள்ளரிக்காய்

திராச்சை,வெள்ளரி,ப்ளூ பெர்ரி, ஆரஞ்சு

கடல்பாசி
 1. முட்டை கடல்பாசி, 2.ஃப்ரூட் கடல்பாசி 3. இளநீர்கடல்பாசி 4. ராஸ்பெர்ரி புட்டிங்
 1. லேயர் ஃப்ரூட் பாலூடா, 2. ஆப்பிள் கீர் 3.மிக்ஸ்டு ஃப்ரூட் பாலூடா
ஃப்ரூட் பாலூடா  4. மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட், 5, ரிச் நட்ஸ்&ஸ்ட்ராபெர்ரி சாலட் 
சிக்கன் கஞ்சி
 1. ஓட்ஸ் காய்கறி கஞ்சி 2. சிக்கன் நோன்பு கஞ்சி
சிக்கன் கேல்டு காயின்
கோல்டு காயின் ரெசிப்பி வரும் வாரத்தில் தருகிறேன்.
சிக்கன் கட்லெட்
 1.பறவை கூடு கட்லெட் 2. பிரெட் வெஜ் கட்லெட்3. இட்லி கட்லெட், 4. மட்டன் கீமா கட்லெட்
வெஜ் லாலிபப்
 1. சோயா வெஜ் லாலிபப், 2. கோபி கேபேஜ் பக்கோடா 3, வெஜ் லாலிபப்
சிக்கன் பக்கோடா
 1.சிக்கன் பக்கோடா, 2. முட்டை பஜ்ஜி
மட்டன் சமோசா
 1.கறிவடை 2, இறால் மஞ்சள் வாடா
மட்டன் ஸ்பிரிங் ரோல் 
 1. கீமா ஸ்பிரிங் ரோல் இவ்வளவும் செய்து இருக்கியே சஹருக்கு என்ன பண்ணுன என்று தானே கேக்குரிங்க. இஃப்த்தாருக்கு வந்த சுஜானா எங்களுக்கு சஹருக்கு குஸ்காவும், சிக்கன் கிரேவியும் எடுத்துவந்தாங்க.. அவங்களுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர்..

சுஜானா பொண்ணு தானியா



en-iniyaillam.blogspot. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக